டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்திவைப்பு!!
டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்திவைப்பு!!

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கின் ஒரு பகுதியாக ஞாயிறன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து வேறு எதுவும் நடைபெறக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் குறித்த கேள்வி எழுந்தது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணிகளில் அடங்கிய கட்டிடக்கலை, திட்ட உதவியாளர், ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கு 8ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பின் காரணமாக இந்த தேர்வுகள் குறித்த கேள்வி எழுந்தது. இதுகுறித்து நேற்று விளக்கமளித்த டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்று அறிவித்தது.

ஆனால், தற்போது தேர்வை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வரும் 9ஆம் தேதி நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு வரும் 11-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டைப் பயன்படுத்தி தேர்வர்கள் 11ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வை எழுதலாம். நாளை நடைபெறவுள்ள கட்டடக்கலை, திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in
Next Story

