Theme Check

தாயுடன் சேய்.. இந்தியன் ரயில்வேயில் புதிய வசதி அறிமுகம்..!

தாயுடன் சேய்.. இந்தியன் ரயில்வேயில் புதிய வசதி அறிமுகம்..!

தாயுடன் சேய்.. இந்தியன் ரயில்வேயில் புதிய வசதி அறிமுகம்..!
X

வடக்கு ரயில்வேயில் ‘லக்னோ மெயில்’ ரயிலின் முன்பதிவு பெட்டியில் பெண்கள் பயணம் செய்யும்போது, அவர்களின் குழந்தையை பக்கத்தில் பாதுகாப்பாக படுக்க வைக்கும் வகையில் புதிய படுக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ‘பயணிகளுக்கான புதிய புதிய வசதிகளை ஏற்படுத்தி தருவதில் ரயில்வே முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது, முன்பதிவு பெட்டிகளில் பெண்கள் பயணம் செய்யும்போது அவர்களின் குழந்தையை பக்கத்தில் பாதுகாப்பாக படுக்க வைக்க புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தெற்கு ரயில்வேயில் நீண்ட தூரம் செல்லும் முக்கியமான 70 விரைவு ரயில்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் 'ஏசி' முன்பதிவு பெட்டிகளில் இந்த வசதியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான பணியை விரைவில் துவங்க உள்ளோம்’ என்று கூறினர்.

இந்த புதிய படுக்கை வசதிக்கு ரயில் பயணிகள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதேபோல், மற்ற கோட்டங்களிலும் ஏற்படுத்த ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story
Share it