Theme Check

ஒமைக்ரானை கண்டு அச்சம் வேண்டாம்.. இந்திய மருத்துவ வல்லுநர் முக்கிய தகவல் !!

ஒமைக்ரானை கண்டு அச்சம் வேண்டாம்.. இந்திய மருத்துவ வல்லுநர் முக்கிய தகவல் !!

ஒமைக்ரானை கண்டு அச்சம் வேண்டாம்.. இந்திய மருத்துவ வல்லுநர் முக்கிய தகவல் !!
X

ஒமைக்ரான் பரவலை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 950 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஒரே நாளில் 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தமிழ்நாடு உள்பட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

aiimes director

ஒமைக்ரான் பரவலை கண்டு பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் குலேரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பான விழிப்புணர்வு காணொலியில் பேசியிருக்கும் அவர், டெல்டா திரிபுவை போல, ஒமைக்ரான் திரிபுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ஆக்சிஜன் தேவைப்படாது.

aiimes director

தனிப்பட்ட நபர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை கருத்தில் கொண்டும் ஒமைக்ரானை எதிர்கொள்ள மருத்துவர்கள் தயாராக வேண்டும். தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாலும், இயற்கையாகவே இந்தியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றல் திறன் காரணமாகவும், ஒமைக்ரானை கண்டு அச்சம் அடைய தேவையில்லை. அதே நேரம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் மக்கள் கவன செலுத்தம் வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


newstm.in

Tags:
Next Story
Share it