இவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.. வணிகர்களுக்கு சுங்கத் துறை எச்சரிக்கை..!
இவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.. வணிகர்களுக்கு சுங்கத் துறை எச்சரிக்கை..!

தனிநபர் வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்துமாறு வரும் தகவல்களை நம்பி வணிகர்கள் ஏமாற வேண்டாம் என, சுங்கத் துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து சுங்கத் துறை சார்பில் கூறப்பட்டுள்ளதாவது; ‘சுங்க வரி அல்லது சுங்கக் கட்டணம் செலுத்துமாறு உங்கள் செல்போனுக்கு அழைப்புகள், குறுந்தகவல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் வந்தால் வணிகர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
சுங்கத் துறையிடமிருந்து வரும் அழைப்புகள், குறுந்தகவல்கள் மற்றும் மின்னஞ்சல்களில் ‘டிஐஎன்’ என்ற ஆவண அடையாள எண் இடம் பெற்றிருக்கும். மேலும், தனிநபர் வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட மாட்டார்கள்.
இது போன்ற அடையாள எண்களுடன் குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல்கள் வந்தால், esanchar.cbic.gov.in/DIN/DINSeach என்ற இணையதள முகவரியில் அதை சரி பார்த்துக் கொள்ளலாம். மோசடி நபர்களின் அழைப்புகள் மற்றும் குறுந்தகவலை நம்பி ஏமாற வேண்டாம்.
இது போன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக உள்ளூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கவும் என, சுங்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

