Theme Check

ஜப்பான், இலங்கைக்கு செல்ல வேண்டாம்.. நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !!

ஜப்பான், இலங்கைக்கு செல்ல வேண்டாம்.. நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !!

ஜப்பான், இலங்கைக்கு செல்ல வேண்டாம்.. நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !!
X

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாப்பை ஏற்படுத்தி வருகிறது. எனினும் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் அடுத்தடுத்து அடுத்த நாடுகளில் பாதிப்பு தீவிரமாகி வருவதால் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கும் நாடுகளுக்கு விமான சேவையை ரத்து செய்வது, தன்நாட்டு மக்கள் கொரோனா பாதிப்பும் அதிகம் இருக்கும் நாட்டுக்கு செல்ல தடைவிதித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் 4, 045 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர். இலங்கையில் 2,971 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருநாடுகளிலும் தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட அறிவுறுத்தலில், ஜப்பான் செல்ல வேண்டிய தேவை இருக்கும்பட்சத்தில் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஜப்பானில் தற்போதைய சூழலில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கூட உருமாறிய கொரோனாவை பரப்ப வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க சில வாரங்களே எஞ்சியிருக்கும் நிலையில் தொற்று பரவல் அதிகரித்து இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it