'ஒயின்' வாங்க மதுகடைகளுக்கு போக வேண்டாம்.. இனி இந்த கடைகளிலும் கிடைக்கும்.. அரசு திடீர் அனுமதி !!
'ஒயின்' வாங்க மதுகடைகளுக்கு போக வேண்டாம்.. இனி இந்த கடைகளிலும் கிடைக்கும்.. அரசு திடீர் அனுமதி !!

சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பதற்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது மதுபான கடைகளில் மட்டுமே ஒயின் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்பனை செய்ய மகாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள தகவலில், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் 100 சதுர மீட்டர், அதற்கு மேல் உள்ள வாக்-இன் கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் வழிப்பாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகளில் ஒயின் பாட்டில்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல மதுவிலக்கு அமலில் உள்ள மாவட்டங்களிலும் கடைகளில் மதுவிற்பனை செய்ய முடியாது.
பழச்சாறு மூலம் தயாரிக்கப்படும் ஒயின் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுத்துள்ளதாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் கூறியுள்ளார். அரசின் இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காலத்தில் மாநில அரசு பொது மக்களுக்கு எதையும் செய்யவில்லை. ஆனால் மதுவை ஊக்கப்படுத்துவது அதன் முக்கியத்துவமாக உள்ளது என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
newstm.in

