Theme Check

எந்தவித தயக்கமும் வேண்டாம்.. முதல் டோஸ் போட்டுக் கொண்ட தவான்.. கூறியது என்ன?

எந்தவித தயக்கமும் வேண்டாம்.. முதல் டோஸ் போட்டுக் கொண்ட தவான்.. கூறியது என்ன?

எந்தவித தயக்கமும் வேண்டாம்.. முதல் டோஸ் போட்டுக் கொண்ட தவான்.. கூறியது என்ன?
X

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். தொடர்ந்து சில ஆண்டுகளாக தனது திறமையான ஆட்டத்தால் தொடக்க வீரராக களமிறங்கி கலக்கி வருகிறார். அண்மையில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிகக்க சிறப்பாக விளையாடி இருந்தார் தவான்.

அதேநேரத்தில் கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அண்மையில் ஆக்ஸிஜன் வாங்க நிதியுதவி வழங்கி இருந்தார் தவான். இந்த நிலையில், ஷிகர் தவான் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை செலுத்திக் கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொண்டதை புகைப்படத்துடன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். முன்கள பணியாளர்களின் தியாகத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் வெறும் நன்றி சொன்னால் மட்டும் போதாது. முடிந்த வரை எந்தவித தயக்கமும் இல்லாமல் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். அது தான் கொரோனாவை நாம் வீழ்த்த பெரிதும் உதவும், என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலின் தீவிரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. பயோ பபுளில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்ட போதும் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it