Theme Check

ஆக்சிஜனுக்காக ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது! உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

ஆக்சிஜனுக்காக ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது! உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

ஆக்சிஜனுக்காக ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது! உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!
X

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதனுடைய கோர முகத்தைக் காட்டி வருகிறது. குறிப்பாக இம்முறை இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவம் அதிகளவில் உள்ளது. பல மாநிலங்களில் நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் தவித்து வருகின்றனர். டெல்லி மாநில அரசு, ஆக்சிஜன் தேவைக்காக மத்திய அரசின் காலில் விழவும் தயார் என்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து 45 டன் ஆக்சிஜனை மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு வராமல் பிற மாநிலங்களுக்கு எடுத்து சென்றுள்ளது மத்திய அரசு.

இந்நிலையில், ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட்டை ஆலையை திறப்பது குறித்து பரிசீலனை நடைப்பெற்று வருகிறது. இது குறித்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மக்கள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என அரசு சொல்லக்கூடாது என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. தேவைப்பட்டால், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை தயாரித்து இலவசமாக வழங்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திலும் ஆலையைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர், ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என கலெக்டர் உறுதி அளித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட்டை திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கலெக்டர் அறிக்கை அனுப்பியிருப்பதாகவும், அதனால் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாட்டில் உள்ள வேறு ஆலைகளில் ஆக்சிஜன் தயாரிக்கலாம் என தமிழக அரசு கூறியது.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, மக்கள் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என அரசு சொல்வதா? என கேள்வி எழுப்பினார். சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆலயை திறக்க முடியாது என சொல்லக்கூடாது என்றார்.

Tags:
Next Story
Share it