Theme Check

'லஞ்சம் கொடுக்க வேண்டாம்'- காவல் நிலையத்தில் விளம்பரப் பலகை வைத்து அசத்தும் இன்ஸ்பெக்டர் !!

'லஞ்சம் கொடுக்க வேண்டாம்'- காவல் நிலையத்தில் விளம்பரப் பலகை வைத்து அசத்தும் இன்ஸ்பெக்டர் !!

லஞ்சம் கொடுக்க வேண்டாம்- காவல் நிலையத்தில் விளம்பரப் பலகை வைத்து அசத்தும் இன்ஸ்பெக்டர் !!
X

அடித்தடி வழக்கு, சொத்து பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்களுக்கு காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்கச் சென்றால் லஞ்சம் கொடுத்து தான் காரியத்தை சாதிக்க முடியும் என்ற மனோநிலை மக்கள் மத்தியில் உள்ளது. எனினும் இதற்கு விதி விலக்காக தமிழகம் முழுவதும் காவல்துறையில் அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு காவல் ஆய்வாளர் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளர் வைத்துள்ள விளம்பரப் பலகை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மதுரை மாநகர் சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றிய சரவணன், ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து அவர் கடந்த 25ஆம் தேதி காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

saravanan

இதனைத் தொடர்ந்து தான் மேற்கொண்ட முதல்கட்ட நடவடிக்கை தான் இந்த லஞ்சம் தவிர்க்கும் பலகை. அதில், தான் யாரிடமும் லஞ்சம் வாங்குவதில்லை. தன்னுடைய பெயரை சொல்லி யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம். புகாரை முடித்து தருவதாக கூறி லஞ்சம் யாரிடமும் கொடுக்க வேண்டாம் என விளம்பரப் பலகை வைத்திருப்பது அங்கு வரும் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆய்வாளர் சரவணன், காவல் நிலையத்தில் வைத்துள்ள விளம்பரப் பலகை தற்போது வைரலாகி வருகிறது.

newstm.in

Next Story
Share it