Theme Check

மாணவர்கள் மீது நடவடிக்கை வேண்டாம்.. திருச்சி கலெக்டர் சிவராசு..!

மாணவர்கள் மீது நடவடிக்கை வேண்டாம்.. திருச்சி கலெக்டர் சிவராசு..!

மாணவர்கள் மீது நடவடிக்கை வேண்டாம்.. திருச்சி கலெக்டர் சிவராசு..!
X

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், மாணவ - மாணவியரின் அறிவியல் படைப்பாற்றலை வெளிக்கொணர்ந்து ஊக்குவிக்கும் வகையில், இந்திய அறிவியல் இயக்கத்துடன் இணைந்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி திருச்சி இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் சிவராசு குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்து, மாணவ - மாணவியரின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு அவர்களை பாராட்டினார்.

இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியரின் சொட்டு நீர் பாசன வழிமுறைகள், ஆழ்துளை கிணறுகளை உணர்த்தும் கருவி, கிளீனிங் ரோபோ உள்ளிட்ட 138 அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கலெக்டர் சிவராசு, “பள்ளியில் படித்ததை செய்முறையாக செய்யும்போது மாணவர்களுக்கு எளிதில் புரியும்.

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைவிட அவர்களுக்கு கவுன்சிலிங் அளிப்பதே சரியானது.

திருச்சி மாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை. அவ்வாறு நடந்தால், மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் கவுன்சிலிங்கும் வழங்கப்படும்.

பள்ளிகளுக்கு பேருந்து அல்லது பெற்றோருடன்தான் இருசக்கர வாகனத்தில் வரவேண்டும். மாறாக, 18 வயதிற்குட்பட்ட மாணவ - மாணவியர் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வருவதை ஆர்டிஓ கொண்டு கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Next Story
Share it