Theme Check

மக்கள் துன்பப்படுவது இவர்களது கண்களுக்கு தெரியவில்லையா..!!

மக்கள் துன்பப்படுவது இவர்களது கண்களுக்கு தெரியவில்லையா..!!

மக்கள் துன்பப்படுவது இவர்களது கண்களுக்கு தெரியவில்லையா..!!
X

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்துள்ளது. அதேபோல், நாடு முழுவதும் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.850 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பெட்ரோல் - டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு பற்றி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல் - டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனசாட்சியற்ற செயல்.


பெட்ரோல் – டீசலுக்கு வாட் வரி குறைப்பு, எரிவாயு சிலிண்டருக்கு மானியம் என்றெல்லாம் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற மாநிலத்தில் உள்ள திமுக அரசும் முன்வராதது கண்டனத்திற்குரியது.

ஏற்கெனவே கொரோனா பேரிடரினால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மக்கள், இதனால் மேலும் துன்பப்படுவது இவர்களது கண்களுக்கு தெரியவில்லையா..?” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:
Next Story
Share it