இலங்கையர்கள் ஒவ்வொருவர் தலையிலும் உள்ள கடன் தொகை எவ்வளவு தெரியுமா?
இலங்கையர்கள் ஒவ்வொருவர் தலையிலும் உள்ள கடன் தொகை எவ்வளவு தெரியுமா?

இலங்கையில் ஒருவரின் தனிநபர் கடன் சுமார் 800, 000 ரூபாயாக அதிகரித்துள்ளது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்து வருகிறது இலங்கை. எரிப்பொருட்கள் கிடைப்பதில்லை. உணவுப்பொருட்கள், பழங்கள், இறச்சிகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பல்வேறு நகரங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தவித்து வரும் நிலையில், நிலைமையை சரிசெய்ய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியை இலங்கை கேட்டுள்ளது.
இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான வீழ்ச்சி மற்றும் டாலரின் விலை அதிகரிப்பு என்பவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை தற்போதைய நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என இலங்கை அமைச்சர் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அமரவீர, நாடு அனைத்து துறைகளிலும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. நாட்டின் வெளிநாட்டுக் கடன் ரூ. 17.2 ட்ரில்லியனாக உள்ளது. 1970ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க பதவியேற்ற போது அமெரிக்க டாலர் ஒன்றின் பெறுமதி ரூ.9 காணப்பட்டது.
1977ஆம் ஆண்டளவில் அதன் பெறுமதி ரூ.7ஆக குறைவடைந்தது. 1977ஆம் ஆண்டு முதல் அனைத்து அரச தலைவர்களாலும் அரசாங்கங்களாலும் வெளிநாட்டுக் கடனை குறைக்க முடியவில்லை. அமெரிக்க டாலரொன்றின் மதிப்பு ரூ.200 முதல் 240 வரை உள்ளதால் நாட்டின் டாலர் கையிருப்பு வேகமாக குறைந்துள்ளது. இந்த நிலை எதிர்காலத்திலும் தொடரலாம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர் ஒருவரின் தனிநபர் கடன் சுமார் ரூ.800, 000 ஆக அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
newstm.in

