Theme Check

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் எத்தனை நாள் நடைபெறும் தெரியுமா..?

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் எத்தனை நாள் நடைபெறும் தெரியுமா..?

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் எத்தனை நாள் நடைபெறும் தெரியுமா..?
X

தமிழகத்தில் 16 வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள அரங்கில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் புதிய பேரவையின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைத்தார்.

ஆளுநர் உரை நிறைவடைந்ததும், பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இன்று (22ம் தேதி) முதல் வரும் 24ம் தேதி வரை கூட்டத் தொடா் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, ஜூன் 22 மற்றும் 23ம் தேதிகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் உரையின் மீதான விவாதம் நடைபெறும். அதன் பிறகு, வரும் 24ம் தேதி ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரையாற்றுகிறார்.

இந்த கூட்டத் தொடரில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீது பேரவை உறுப்பினா்கள் உரையாற்றுவா். பேரவையில் உள்ள கட்சி உறுப்பினா்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போன்று, அவையில் உறுப்பினா்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

16வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் என்பதால், உறுப்பினா்களிடம் இருந்து கேள்விகளைப் பெற்று, அதனை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி பதில்களைப் பெற காலம் தேவைப்படுவதால், கேள்வி நேரம் நடைபெறுவது கேள்விக்குறியே என அவா் கூறியிருந்தாா்.

எனவே, தினமும் பேரவைக் கூட்டத் தொடா் தொடங்கியதுமே ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதங்களே நடைபெறும்.

Tags:
Next Story
Share it