உங்க ஆதார் கார்டுல இதையெல்லாம் எத்தனை முறை மாத்தலாம்னு தெரியுமா..?
உங்க ஆதார் கார்டுல இதையெல்லாம் எத்தனை முறை மாத்தலாம்னு தெரியுமா..?

இன்றைய கால கட்டத்தில் ஆதார் அட்டை முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இந்த ஆதார் அட்டை, இந்திய குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை முதலியனவற்றை கொண்டுள்ளது. இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக ஆதார் அட்டை கருதப்படுகிறது.

ஆதார் எண்ணானது தற்போது வங்கிகள் முதல் ரேஷன் அட்டை வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் பெயர், புகைப்படம், முகவரி போன்ற விவரங்களை மாற்ற அல்லது புதுப்பிக்க UIDAI பல சேவைகளை வழங்கி வருகிறது.
UIDAI, 2019ம் ஆண்டில் ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற விவரங்களை எத்தனை முறை மாற்றலாம் என்பதற்கான வரம்பு உள்ளதாக அறிவித்துள்ளது. எளிய முறையில் ஆன்லைன் மூலம் தகவல்களை மாற்றிக்கொள்ளலாம். சில மாற்றங்களை ஆதார் பதிவு மையங்களில் மட்டுமே செய்ய முடியும். அதற்காக குறைந்த அளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆதார் அட்டையில் எந்தெந்த தகவல்களை எத்தனை முறை புதுப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்வோம். இது குறித்து UIDAI வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஆதார் அட்டையில் உள்ள பெயர்களை அதிகபட்சம் இரண்டு முறை மாற்றலாம். அதே போல், அட்டைதாரர்கள் தங்கள் பிறந்த தேதியை ஒருமுறை மட்டுமே புதுப்பிக்க முடியும் என்று கூறியுள்ளது.
அதேபோல், பிறந்த ஆண்டை ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதியின் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் என்ற அளவிற்கு மட்டுமே அதிகமாகவோ, குறைவாகவோ மாற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆதார் அட்டையில் பாலினத்தை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Tags:
Next Story