அஜித் போலவே வழக்கறிஞராக நடிக்கும் சூர்யா- எந்த படத்தில் தெரியுமா..?
அஜித் போலவே வழக்கறிஞராக நடிக்கும் சூர்யா- எந்த படத்தில் தெரியுமா..?

கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ள நடிகர் சூர்யா, பாண்டியராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் அவ்வப்போது தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.
மேலும் நடிகர் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்திலும், கவுதம் மேனன் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். இதற்கிடையில் நவரஸா என்கிற நெட்ஃப்ளிக்ஸ் ஆந்தாலஜி படத்தின் கவுதம் மேனன் இயக்கும் ஒரு கதையிலும் நடித்து முடித்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல் மேலும் ஒரு புதிய படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதற்கான ஷூட்டிங் பணிகள் படு சீக்ரெட்டாக நடத்தப்பட்டு வருகிறது. சூர்யாவின் 2டி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லையாம்.
மேலும், இதில் சூர்யா கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகும் அந்த படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் மற்ற நடிகர்கள் நடித்து வருகிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பை ரசிகர்களுக்கு சர்பரைஸாக வழங்க சூர்யா திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதற்குள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி சூர்யாவை மனம் வருந்தச் செய்துவிட்டன.

