உலகின் முதல் எஸ்.எம்.எஸ்-க்கு மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுவாரசிய தகவல் !

உலகின் முதல் எஸ்.எம்.எஸ்-க்கு மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுவாரசிய தகவல் !

உலகின் முதல் எஸ்.எம்.எஸ்-க்கு மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுவாரசிய தகவல் !
X

தொழில்நுட்ப வளர்ச்சி பெரியளவில் வளர்ச்சியடைந்த இந்த காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். ஒப்போது நாம் எஸ்.எம்.எஸ். அனுப்புவது இல்லை. மாறாக வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டோம். நமக்கு தேவையான எல்லாவற்றையும் இணைய வழியை பயன்படுத்தி பெற்று கொள்கிறோம்.

cell

செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த போது அதில் எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) அதிகளவில் அனுப்பப்பட்டன. இந்த நிலையில் உலகின் முதல் எஸ்.எம்.எஸ்., பாரீஸ் நகரில் ஏலம் விடப்பட்டது. கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி வோடபோன் என்ஜினீயர் நீல் பாப்வொர்த் தனது கணினியில் இருந்து இங்கிலாந்தில் உள்ள தனது மேலாளருக்கு ‘மெர்ரி கிறிஸ்துமஸ் (கிறிஸ்துமஸ் வாழ்த்து) என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினார். இது தான் உலகின் முதல் எஸ்.எம்.எஸ். ஆகும்.

cell xmas

இந்த எஸ்.எம்.எஸ்., பிரிட்டிஸ் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோனால் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஏலம் விடப்பட்டது. இந்த உலகின் முதல் எஸ்.எம்.எஸ். 1,07,000 யூரோக்களுக்கு ஏலம் போனது. அதாவது இந்திய மதிப்பில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.85 லட்சம் ஆகும்.
இதுகுறித்து ஏல மையத்தின் தலைவர் மாக்சிமிலியன் அகுட்டெஸ் கூறுகையில், ஆண்டு இறுதி நிகழ்வுகளின் நடுவில் இருந்ததால் என்ஜினீயர் தனது மேலாளருக்கு மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற எஸ்.எம்.எஸ்.சை அனுப்பினார்.

கண்ணுக்கு தெரியாத பொருட்களை விற்பனை செய்வது பிரான்சில் சட்டப்பூர்வமானதல்ல. எனவே குறுஞ்செய்தியை டிஜிட்டல் சட்டகத்தில் தொகுத்து, குறியீடு மற்றும் தகவல் தொடர்பு நெறிமுறையை கடைப்பிடித்து ஏலம் விடப்பட்டது என்றார்.

newstm.in

Tags:
Next Story
Share it