Theme Check

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழியில் என்ன இருக்கு தெரியுமா?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. அதன்படி அவரது பிறந்த நாளான இன்று (பிப்- 24) அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்துக்கான உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழியில் என்ன இருக்கு தெரியுமா?
X

இந்த உறுதிமொழியில் இந்திய குடிமகனாகிய நான் சாதி, மதம், மொழி, இனம், சமூக பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன். எனது செயல்பாடுகளால எந்த ஒரு குழந்தையும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்துகொள்வேன். எனது கவனத்துக்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள். வன்முறைகள் மற்றும் எந்த ஒரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன். மேலும் இதை உரிய் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்.

இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன். குழந்தை திருமணம் பற்றி தெரிய வந்தாலும் அதை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சியிலும் ஈடுபடுவேன். குழந்தை தொழிலாளார்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணயாக இருப்பேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்ட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமார உறுதி கூறுகிறேன்.

தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் உறுதிமொழியில் இப்படிதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it