Theme Check

ஜீன்ஸ் பேண்ட்டில் அந்தக் குட்டி பாக்கெட் எதுக்கு தெரியுமா?

ஜீன்ஸ் பேண்ட்களில், ஒரு சின்ன பாக்கெட் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.அவை எதற்காக வடிவமைக்கப்பட்டன தெரியுமா? முன்பு அமெரிக்கக் 'கவ்பாய்'கள் (Cowboy) தங்களின் சைஸ் 16 பாக்கெட் கடிகாரங்களை வைக்க. இப்போது அக்கடிகாரங்கள் போனாலும், அப்பாக்கெட்கள் வைத்துத் தைக்கும் பழக்கம் இன்னும் போகவில்லை

ஜீன்ஸ் பேண்ட்டில் அந்தக் குட்டி பாக்கெட் எதுக்கு தெரியுமா?
X

நாம் வீக்என்டுகளில் விரும்பி அணியும் ஜீன்ஸ் பேண்ட்களில், ஒரு சின்ன பாக்கெட் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள் (இப்போது அதனை எல்லா வகை பேண்ட்களிலும் வைக்கத் தொடங்கிவிட்டது வேறுகதை!). நாம் அதில் கீ செயின்களையும், சில்லறைக் காசுகளையும் போடப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவை எதற்காக வடிவமைக்கப்பட்டன தெரியுமா?

முன்பு அமெரிக்கக் 'கவ்பாய்'கள் (Cowboy) தங்களின் சைஸ் 16 பாக்கெட் கடிகாரங்களை வைக்க. இப்போது அக்கடிகாரங்கள் போனாலும், அப்பாக்கெட்கள் வைத்துத் தைக்கும் பழக்கம் இன்னும் போகவில்லை.சிலர் இதை டிக்கட் பாக்கெட் என்றும் குறிப்பிடுகின்றனர்.

லீவிஸ் ஜீன்ஸ் கம்பெனியில் பணியாற்றிய நபர் இணையத்தளம் ஒன்றில் கூறியிருக்கும் பதிலில், இது காண்டம் பாக்கெட் என்றும். 19-ம் நூற்றாண்டில் ஜீன்ஸ் உற்பத்திக்கு வந்த பிறகு இதை வாட்ச் பாக்கெட் என மாற்றி அழைக்க துவங்கினர் என்றும் கூறியுள்ளார்.

ஜீன்ஸ் புதியது போல் இருக்க எவ்வாறு துவைக்க வேண்டும்?

உங்கள் ஜீன்ஸ் வெளுத்துப் போகாமல் இருக்க வேண்டுமானால், ஜீன்ஸைத் துவைக்கும் போது உட்பகுதியை வெளியே எடுத்துப் போட்டுத் துவைக்க வேண்டும். இதனால் ஜீன்ஸ் சாயம் போகாமல் புதிது போன்று நீண்ட நாட்கள் இருக்கும்.

ஜீன்ஸின் நிறம் மாறாமல் இருக்க வேண்டுமெனில் ப்ளீச் செய்ய வேண்டாம். ப்ளீச்சிங் செய்தால், ஜீன்ஸின் நூலிழை பாதிக்கப்பட்டு, விரைவில் ஜீன்ஸ் பழையது போன்று காணப்படும்.

ஜீன்ஸைத் துவைத்த பின், அதனை வெயிலில் உலர்த்தும் போது, சூரியக்கதிர்கள் நேரடியாக ஜீன்ஸின் வெளிப்புறம் படாதவாறு, ஜீன்ஸை திருப்பிப் போட்டு உலர்த்துங்கள். இல்லையெனில் சூரியக்கதிர்களால் ஜீன்ஸின் நூலிழை பாதிக்கப்பட்டு, வெளுத்துப் போக ஆரம்பிக்கும்.

newstm.in

Tags:
Next Story
Share it