கேரள சூப்பர் ஸ்டார்களை பின்னுக்கு தள்ளிய விஜய்… எதில் தெரியுமா..?

கேரள சூப்பர் ஸ்டார்களை பின்னுக்கு தள்ளிய விஜய்… எதில் தெரியுமா..?

கேரள சூப்பர் ஸ்டார்களை பின்னுக்கு தள்ளிய விஜய்… எதில் தெரியுமா..?
X

தமிழ்த் திரையுலகில் சமீபகாலமாக, விஜய் நடிக்கும் திரைப்படங்கள் மிகப்பெரிய வசூலை வாரிக் குவித்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் அளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவிலும் அந்த மாநில சூப்பர் ஸ்டார்களை பின்னுக்கு தள்ளிவிட்டு விஜய் வசூல் அளவில் சாதனை படைத்துள்ளார். கேரள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோரிடையே தான் கடந்த பல ஆண்டுகளாக போட்டி இருந்தது. இருவரது திரைப்படங்களும் அதிக வசூலை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

1

இதனை அடுத்து பிரித்விராஜ், பகத் பாசில், நிவின் பாலி போன்ற திறமையான நடிகர்களின் படங்களும் நல்ல வசூலைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விஜய்யின் படங்கள் கேரளாவில் வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது. தமிழகத்தை போலவே கேரளாவிலும் விஜய்க்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருப்பதால் விஜய் படங்கள் வெளியாகும் தினத்தை திருவிழா போன்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் போட்டி என்பது விஜய்க்கும் மோகன்லாலுக்கும் இடையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் வசூலில் முதல் 5 இடங்களைப் பிடித்த படங்களில் விஜய் நடித்த படங்கள் இரண்டு உள்ளன என்பதும், இதன் மூலம் கேரளாவிலும் விஜய் வசூலில் சாதனை படைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it