Theme Check

கடந்த தேர்தலில் அதிகம் செலவு செய்த கட்சி எது தெரியுமா?- தேர்தல் ஆணையம் வெளியிட்டது !!

கடந்த தேர்தலில் அதிகம் செலவு செய்த கட்சி எது தெரியுமா?- தேர்தல் ஆணையம் வெளியிட்டது !!

கடந்த தேர்தலில் அதிகம் செலவு செய்த கட்சி எது தெரியுமா?- தேர்தல் ஆணையம் வெளியிட்டது !!
X

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டில் உள்ள மொத்த 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. மேற்குவங்கத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், இந்த 5 மாநில தேர்தலுக்காக செலவிடப்பட்ட தொகையைத் தேசிய மற்றும் மாநில கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன. ஆனால், பாஜக தேர்தல் செலவு விவரங்களை இதுவரை சமர்ப்பித்ததாக தெரியவில்லை. இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், அதிகபட்சமாக திரிணமூல் காங்கிரஸ் மொத்தமாக 154.28 கோடி ரூபாயை மேற்கு வங்கத்தின் தேர்தல் செலவுக்கு பயன்படுத்தியுள்ளது.

dmk office

தேர்தல் செலவு பட்டியலில் திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தமாக 114.14 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. இதில், 39.78 கோடி ரூபாயை ஊடகத்தில் விளம்பரங்களை வெளியிடுவதற்காக செலவழித்துள்ளது. நிலுவையில் உள்ள குற்றச்செயல்கள் குறித்த வேட்பாளர்களின் விவரங்களை வெளியிடுவதற்காக 54.47 கோடி ரூபாய் பணம் வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

dmk office

ஐந்து மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் 84.93 கோடி ரூபாயை செலவழித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இருமாநில சட்டப்பேரவை தேர்தலுக்கும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலுக்கும் மொத்தமாகவே 57.33 கோடி ரூபாயை அதிமுக செலவழித்துள்ளது. இதில், 56.65 கோடி ரூபாயை விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தியுள்ளது. செய்தித்தாள், தொலைக்காட்சி விளம்பரம், ஆன்லைன் விளம்பரம், குறுஞ்செய்தி ஆகியவை அடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவு விவரங்களை பாஜக அளிக்காததால், அதனை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை என கூறப்படுகிறது.

newstm.in


Tags:
Next Story
Share it