“நான் யார் தெரியுமா?”... போலீஸிடம் எம்.எல்.ஏவின் மகள் வாக்குவாதம்!!
“நான் யார் தெரியுமா?”... போலீஸிடம் எம்.எல்.ஏவின் மகள் வாக்குவாதம்!!

சிக்னலில் நிற்காமல் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் மகள் போக்குவரத்து போலீஸாரிடம் வாக்கு வாத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநில, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் அர்விந்த் நிம்பவாலியின் மகள் அண்மையில் நண்பர்களுடன் BMW சொகுசு காரில் ராஜ் பவன் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் காரை சிக்னலில் நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இதையடுத்து போக்குவரத்து போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி, விதிகளை மீறியதாகக் கூறி அவரிடம் அபராதம் கேட்டனர். ஆனால், அவர் அபராதம் செலுத்த மறுத்து நான் எம்எல்ஏவின் மகள், எம்எல்ஏவின் வாகனங்கள் சிக்னலில் நிற்கவேண்டிய அவசியம் இல்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த சம்பத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த செய்தியாளர்களையும் அவர் தகாத வார்த்தைகளால் திட்டினார். ஆனாலும் அபராத தொகையைச் செலுத்திவிட்டு தான் செல்ல வேண்டும் என்று போலீஸார் மீண்டும் வலியுறுத்தினர்.
அப்போது அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். ஆன்லைனில் பணம் கட்டலாம் என்று போலீஸார் கூறினர். பின்னர் அபராதம் கட்டிவிட்டு அவர் அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தனது மகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால், மகள் சார்பாக தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கர்நாடாக சட்டமன்ற உறுப்பினர் அர்விந்த் நிம்பவாலி தெரிவித்துள்ளார்.
newstm.in

