காதலியை கரம்பிடித்த காதல் பட பிரபலம்- யாரென்று தெரிகிறதா..?
காதலியை கரம்பிடித்த காதல் பட பிரபலம்- யாரென்று தெரிகிறதா..?

கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘காதல்’. இது இயக்குநர் பாலாஜி சக்திவேலுக்கு முதல் படமாகும். இந்த படம் மூலம் தான் நடிகை சந்தியா திரையுலகுக்கு அறிமுகமானார். மேலும் சினிமாவில் பரத்துக்கு திருப்புமுனையாகவும் இந்த படம் அமைந்தது.
இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் அருண் குமார். பரத் உதவியாளராக சிறுவன கதாபாத்திரத்தில் நடித்த இவர் மேலும் சில படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தார்.சில வருடங்களாக ஒரு பெண்ணை அருண் காதலித்து வந்துள்ளார். தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.
தம்பதிகள் இருவருக்கும் திரையுலகத்தினர் வாழ்த்து கூறி வருகின்றனர்.
Tags:
Next Story

