ஓபிஎஸ்-க்கு பதில் புதிய பொருளாளர் யார் தெரியுமா..?
ஓபிஎஸ்-க்கு பதில் புதிய பொருளாளர் யார் தெரியுமா..?

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் இன்று (27-ம் தேதி) நடைபெற்றது.
அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் பங்கேற்றனர்.
5 பேர் சில காரணங்களால் வர முடியவில்லை என கடிதம் கொடுத்துள்ளனர். 4 பேர் பங்கேற்கவில்லை. வரும் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் கூட்டுவதற்கான அழைப்பிதழை தபாலில் அனுப்ப கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில், அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கிவிட்டு புதிய பொருளாளரை நியமிப்பது குறித்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அதன்படி, கட்சியின் புதிய பொருளாளராக கே.பி.முனுசாமி அல்லது திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

