Theme Check

ரயில் டிக்கெட் புக் செய்ய சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா?

ரயில் டிக்கெட் புக் செய்ய சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா?

ரயில் டிக்கெட் புக் செய்ய சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா?
X

ஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட் புக் செய்ய சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர், ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால் ஜெனரல், லேடீஸ், லோயர் பெர்த்/ சீனியர் சிட்டிசன், டட்கல் என்ற தெரிவுகள் இருக்கும். திவ்யாங் என்று ஒரு தெரிவு இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

திவ்யாங் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தெய்வீக உறுப்பு கொண்டவர் என்று தமிழில் பொருளாம். மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதமர் வைத்த பெயர் அது. அதிகாரிகளின் விசுவாசமோ என்னவோ ஐ.ஆர்.சி.டி.சி முன் பதிவில் அதை சொருகி விட்டார்கள்.

su-venkatesan

இந்தியாவில் சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் 14135 பேர்தான். தமிழ் 8 கோடி பேரின் தாய் மொழி. ஒன்றிய அரசும், அதன் அதிகாரிகளும் நினைத்தால் 14000 பேரின் தாய் மொழியை புரிகிறதா புரியாதா என்று கூட யோசிக்காமல் திணிக்க முடியும்.

ஆனால் இவ்வளவு தொழில் நுட்ப மேம்பாடு இருந்தாலும் 8 கோடி பேரின் தாய் மொழியை முன் பதிவுக்கான தெரிவு மொழியில் இணைக்க முடியாது.

ஆங்கிலமே திணற அடிக்கும் போது அறவே புரியாத மொழியை எல்லாம் திணிப்பதை கைவிடுங்கள். வார்த்தைகளில் புனிதம் இருந்தால் போதாது. நோக்கம் புனிதமாக இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.


newstm.in

Next Story
Share it