Theme Check

சுடுதண்ணீ வச்சி தரமாட்டியா? மனைவியை கோடாலியால் வெட்டி கொன்ற கொடூர கணவன்!!

தென்காசியை சேர்ந்த பொன்னுசாமி (80) என்பவர் குளிப்பதற்கு வெந்நீர் வைத்து தர மறுத்த மனைவியை கோடாலியால் வெட்டி கொடூரமாக கொலை செய்த 80 வயது கணவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சுடுதண்ணீ வச்சி தரமாட்டியா? மனைவியை கோடாலியால் வெட்டி கொன்ற கொடூர கணவன்!!
X

குளிப்பதற்கு வெந்நீர் வைத்து தர மறுத்த மனைவியை கோடாலியால் வெட்டி கொடூரமாக கொலை செய்த 80 வயது கணவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தென்காசியை சேர்ந்த பொன்னுசாமி (80) என்பவர் முதல் மனைவி ஆவுடையம்மாள் உயிருடன் இருக்கும் போதே சீதாலட்சுமி (52) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.கடந்த மூன்றரை ஆண்டுகளாக சங்கரன்கோவில் அருகேவுள்ள பந்தப்புள்ளி என்ற கிராமத்தில் அவர்கள் இருவரும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் முதியவர் பொன்னுசாமி பெயரில் இருக்கும் சொத்துக்களை தன் பெயரில் மாற்றி எழுதி தருமாறு சீதாலட்சுமி வற்புறுத்தி வந்துள்ளார்.

சுடுதண்ணீ வச்சி தரமாட்டியா? மனைவியை கோடாலியால் வெட்டி கொன்ற கொடூர கணவன்!!

இதனால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி பிணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் நடந்து போதும் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அடுத்தநாள் சீதாலட்சுமியை வெகுநேரமாக காணவில்லை என்று சந்தேகம் அடைந்த அக்கப்பக்கத்து வீட்டார், அவருடைய வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர்.அங்கு சீதாலட்சுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போது, சீதாலட்சுமியின் கணவர் பொன்னுசாமி தலைமறைவானது தெரிய வந்தது. அவரை தேடி கண்டுப்பிடித்த போலீசார், பொன்னுசாமியிடன் விசாரணை நடத்தினர். அதில், குளிப்பதற்காக வெந்நீர் வைத்து தரச்சொல்லி கேட்ட போது, தனக்கு சீதாலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது. பிறகு அவர் உறங்கச்சென்றுவிட்டார். சமயம் பார்த்து நான் சீதாலட்சுமியை கோடாலியால் வெட்டி கொன்றேன் என்றார்.

முதியவரின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சாதாரண தகராறுக்காக 80 வயது முதியவரை மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் சங்கரன் கோவில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it