மருத்துவர்கள் சாதனை !! பன்றியின் சிறுநீரகம் மனிதனுக்கு பொருத்தி செயல்படுத்தினர் !!
மருத்துவர்கள் சாதனை !! பன்றியின் சிறுநீரகம் மனிதனுக்கு பொருத்தி செயல்படுத்தினர் !!

கொரோனாவுக்கு எதிராக மருத்துவ உலகம் போராடிக்கொண்டிருக்கும் அதேவேளையில் அனைத்து மக்களும் வியக்கத்தக்க ஒரு சிகிச்சை மூலம் திரும்பிபார்க்க வைத்துள்ளளது. அதாவது, விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு உறுப்பு மாற்றம் செய்யும் முயற்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இதற்காக பல்வேறு வகையான சிகிச்சைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தொடக்கத்தில் மனிதனுக்கு நெருங்கிய இனமான மனித வகைக் குரங்குகளிடம் இருந்து உறுப்பு மாற்றம் செய்யும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். பல கட்ட முன்னேற்றத்தைப் பெற்றுள்ள இந்த ஆராய்ச்சி தற்போது மிகப்பெரிய மைல்கல்லைத் தொட்டுள்ளது என்றே கூறலாம்.

முதன்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளனர் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த என்.ஒய்.யு லங்கோன் மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த ஒரு நபரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்தது.
இதனையடுத்து அவருடைய குடும்பத்தினரின் அனுமதியைப் பெற்று மருத்துவ விஞ்ஞானிகள் பன்றியினுடைய சிறுநீரகத்தை பொருத்தி சோதனை மேற்கொண்டனர். அதாவது, பன்றியின் சிறுநீரகத்தை உடலுக்கு வெளியே வைத்து அவரின் ரத்தக் குழாய்களில் இணைக்கப்பட்டு, மூன்று நாட்கள் வரை பராமரிக்கப்பட்டுள்ளது. சிறுநீரகம் மூளைச் சாவடைந்த நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் நிராகரிக்கப்படாமல் இயங்கியுள்ளது அப்போது தெரியவந்தது.

சிறுநீரக செயல்பாட்டின் சோதனை முடிவுகள் “மிகவும் சாதாரணமாகத் இருந்தது” என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ராபர்ட் கூறியுள்ளார்.
மேலும் முன்னர் இருந்த சிறுநீரகத்தின் செயல்பாடு மிக மோசமானதாகவும், கெரோட்டினின் அளவு அசாதாரணமாகவும் இருந்ததாக குறிப்பிடும் அவர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு கெரோட்டின் அளவு வழக்கமான நிலைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.
இது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு மைல்கல்லாகவும், லட்சக்கணக்கானோர் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலையில், உறுப்புகளின் பற்றாக்குறையை நீக்கும் வகையிலும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
newstm.in

