கொரோனா வைரஸ் பின்னங்கால் பிடற ஓட என்ன செய்ய வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்?
உலகமே அதிலும் வளர்ந்த நாடுகளே அதிக அச்சத்தில் உறைந்திருக்க எப்படி இவ்வளவு தைரியமாக நம்மால் விரட்ட முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கலாம். பாரம்பரியமாகவே சித்த மருத்துவத்தில் நமக்கு தனி இடம் உண்டு. சித்த மருத்துவர்கள் சொல்வது போன்று உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருந்தால் உடலில் எந்த நோயும் வராது. இதை சமநிலையில் வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு பலரும் ஏதோ ஒருவகை ஆரோக்கிய பிரச்சனையை கொண்டிருக்கிறார்கள். எனினும் இந்த வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க இந்த ஐந்தை மட்டும் கடைபிடிக்கலாம்.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளில் ஏறத்தாழ 14 நாடுகளில் தொற்றை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வாரம் கேரளாவில் சீனாவிலிருந்து வந்திருந்த மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியா முழுக்க அதிர்வலையை ஏற்படுத்திய இந்த செய்தியை தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவத்துறையும், மருத்துவர்களும் பல முயற்சிகளை கையாண்டார்கள்
அப்படி அவர்கள் சொன்ன அறிவுரையை நீங்கள் கடைபிடித்தால் கொரோனோ வைரஸ் பின்னங்கால் பிடற ஓடி விடும். உலகமே அதிலும் வளர்ந்த நாடுகளே அதிக அச்சத்தில் உறைந்திருக்க எப்படி இவ்வளவு தைரியமாக நம்மால் விரட்ட முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கலாம்.
பாரம்பரியமாகவே சித்த மருத்துவத்தில் நமக்கு தனி இடம் உண்டு. சித்த மருத்துவர்கள் சொல்வது போன்று உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருந்தால் உடலில் எந்த நோயும் வராது. இதை சமநிலையில் வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு பலரும் ஏதோ ஒருவகை ஆரோக்கிய பிரச்சனையை கொண்டிருக்கிறார்கள். எனினும் இந்த வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க இந்த ஐந்தை மட்டும் கடைபிடிக்கலாம்.
1. உணவில் அக்கறை
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்களிடம் எந்த நோயும் அண்டாது என்பதை எல்லா மருத்துவர்களும் சொல்கிறார்கள். அதனால் உணவில் இந்த கொரோனோ வைரஸ் தாக்கம் குறையும் வரை கவனம் செலுத்துங்கள். வைட்டமின் சி நிறைந்திருக்கு உணவுகளை அதிகம் எடுத்துகொள்ளுங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆரஞ்சு. எலுமிச்சை, மாதுளை, பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கீரைகள் என்று நமது உணவு முறைக்கு மாறுங்கள்.

2. சூரிய ஒளி
வெயிலா இது என்று ஓடி ஒளியாமல் எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் வெயிலில் இருங்கள். குறிப்பாக இளம்பெண்கள் சன்ஸ்க்ரீன் லோஷன் தடவி வெயிலை தவிர்த்தால் தொற்றை எளிதாக வரவேற்பது போல் ஆகிவிடும். ஈரப்பதம் அதிகமிருக்கும் இடத்தில் வளரும் இந்த தொற்றை வெப்ப நிலை மிகுந்த நம் நாட்டில் எளிதாக எதிர் கொள்ளலாம்.

3. அரைவேக்காட்டு இறைச்சி
இறைச்சி மூலம் பரவியது கொரோனா என்று சொன்னாலும் அது குறிப்பிட்ட இந்த விலங்கினால் தான் என்று கண்டறிந்து தெளிவுபடுத்தவில்லை என்பது கவனிக்க வேண்டியது. அதே நேரம் இறைச்சியால் இந்த வைரஸ் தொற்று அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இறைச்சியை வேக வைக்கும் போது அதிகப்படியான வெப்பநிலையில் தான் வேக வைக்கிறோம். அந்த அதிகப்படியான வெப்பநிலையில் கிருமிகள் ஓடிவிடவே செய்யும். அதனால் இறைச்சியை அரைவேக்காடாக வேகவைக்காமல் முழுமையாக வேக வைத்து சாப்பிடுங்கள்.
4. சுத்தமும் சுகாதாரமும்
பொதுவாகவே வெளியிலிருந்து வந்ததும் கை, கால்களை கழுவிய பிறகு தான் வீட்டிற்குள் அனுமதிப்பார்கள். ஆனால் இப்போது வீட்டுக்குள் வந்துதான் இதை செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக முகம், கை, கால் சோப்பு போட்டு கழுவிய பிறகே தண்ணீர் குடிக்க தொடங்குங்கள். வெளியிடங்களில் சற்று முகம் சுளிக்க வைக்கும் விதமாக பாக்கு அழுக்கும், தூசியும் படர்ந்த இடத்தில் கண்டிப்பாக ஒதுங்கி இருங்கள். அங்கிருக்கும் கைப்பிடிகள், பலகைகள், நாற்காலிகளை பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை.
வீட்டில் கழிவை சேர்க்காதீர்கள். ஆரம்ப காய்ச்சல் அறிகுறி சளி தொண்டை கரகரப்பு இருந்தாலே சுக்கு, இஞ்சி, மிளகு தட்டிப்போட்டு சூப் வைத்து குடியுங்கள்.

5. கூட்டத்தில் ஓட்டம்
பொது இடங்களில் குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகமிருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிருங்கள். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதில் மூத்தவர்கள் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. அப்படியே வெளியே சென்றாலும் முகமூடி அணிந்து செல்வது நல்லது.
மேற்சொன்ன இந்த ஐந்து விஷயங்களையும் சிறிதும் மாறாமல் கடைபிடித்தால் கண்டிப்பாக கொரோனோ என்னும் அரக்கனை எளிதாக தவிர்க்க முடியும்.
newstm.in

