யாரை எல்லாம் கொரோனா தாக்கும் தெரியுமா?
கொரோனா குறித்து பலவிதமான தகவல்கள் நோயை விட வேகமாக பரவி வருகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர்.சி.என் ராஜா, வதந்திகளை நம்பி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா தாக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது எனவும் கூறினார்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தான் கொரோனா தாக்கும் என இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர்.சி.என் ராஜா தெரிவித்துள்ளார்.
கொரோனா குறித்து பலவிதமான தகவல்கள் நோயை விட வேகமாக பரவி வருகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர்.சி.என் ராஜா, வதந்திகளை நம்பி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா தாக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது எனவும் கூறினார். மேலும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதிகள் நம்நாட்டில் உண்டு என்று கூறியுள்ள அவர், மருத்துவர்கள் அனைவரும் எந்த நேரமாக இருந்தாலும் மக்களுக்கு உதவ தயாராக இருப்பாத தெரிவித்தார்.
newstm.in

