வெங்காயத்தினால் கறுப்பு பூஞ்சை தொற்று பரவுகிறதா..?

வெங்காயத்தினால் கறுப்பு பூஞ்சை தொற்று பரவுகிறதா..?

வெங்காயத்தினால் கறுப்பு பூஞ்சை தொற்று பரவுகிறதா..?
X

இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குணமடைந்தவர்களிடையே கருப்பு பூஞ்சை தாக்குதல் அதிகரித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தற்போது வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாம் உணவில் பயன்படுத்தும் வெங்காயத்தின் மேல் பகுதியில் காணப்படும் கருப்பு பூஞ்சை மற்றும் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருக்கும் ரப்பரில் காணப்படும் கருப்பு பூஞ்சை ஆகியவை மூலம் கரும்பூஞ்சை வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வேகமாக பரவி வருகின்றன.

இதுதொடர்பாக பேசி மருத்துவ நிபுணர்கள், அந்த செய்திகள் அனைத்தும் போலியானது என்றும் அதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். வெங்காயத்தின் மேல் காணப்படும் பூஞ்சைகள் பூமியின் கீழ் உள்ள பூஞ்சைகள் என்றும் கருப்பு பூஞ்சையை உருவாக்கும் வைரஸ்கள் வேறானது என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags:
Next Story
Share it