குரங்கை கொன்ற நாய்கள்... பழிக்கு பழியாக 80 நாய்க்குட்டியை கொன்ற குரங்குகள் !!
குரங்கை கொன்ற நாய்கள்... பழிக்கு பழியாக 80 நாய்க்குட்டியை கொன்ற குரங்குகள் !!

உண்மையில் உலகம் முழுவதிலும் இப்படியோரு சம்பவம் வேறு எங்கும் நடந்திருக்காது. அந்த அளவுக்கு பழிக்கு பழிவாங்கும் நிகழ்வு பெரும் பரபரப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள லாவூல் கிராமத்தில் அதிகமாக குரங்குகள் உள்ளன. குரங்குகள் வீதிகளுக்கும் வருவதால், குரங்குகளுக்கும் நாய்களுக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த கிராமத்தில் வசிக்கும் குரங்கு ஒன்று 80க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை கொன்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும், சில மாதங்களுக்கு முன் இங்கு உள்ள ஒரு குரங்கு குட்டியை சில தெரு நாய்கள் சேர்ந்து கொன்றது. அன்றிலிருந்து கிராமத்தில் உள்ள குரங்குகள் நாய்களை பழிவாங்கும் செயல்களில் ஈடுபட தொடங்கின. இறந்த குரங்கு குட்டியின் மரணத்திற்கு நாய் குட்டிகளை கொன்று தாய், தந்தை குரங்குகள் பழிவாங்குகின்றன என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

குரங்குகள் நாய்க்குட்டிகளை எடுத்துச் செல்வதை இங்கு தினமும் காண முடிகிறது. அவ்வாறு இதுவரை சுமார் 80க்கும் மேற்பட்ட நாய்குட்டிகளை இங்கு உள்ள குரங்குகள் கொன்றுள்ளன. நாய்குட்டிகளை மரங்கள், கட்டிடங்கள் போன்ற உயரமான இடங்களுக்கு தூக்கிச்சென்று கீழே வீசி குரங்குகள் கொல்லுகின்றன என்றும் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, குரங்குகளை விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதியினர் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து அந்த கிராமத்திற்கு வந்த வனத்துறையினர் இரண்டு குரங்குகளை பிடித்துள்ளனர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
— SAY CHEESE! 👄🧀 (@SaycheeseDGTL) December 17, 2021
newstm.in

