Theme Check

வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது ! கர்நாடகாவில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு !

வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது ! கர்நாடகாவில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு !

வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது ! கர்நாடகாவில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு !
X

கர்நாடகாவில் நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 34,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13.39 லட்சத்தை கடந்தது. அதேபோல், ஒரே நாளில் 143 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 14,426ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தலைநகர் பெங்களூருவில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவிலேயே பெருநகரங்களில் பெங்களூரு தான் வைரஸ் பாதிப்பில் முதலிடத்தை பிடித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிட்டது.

இந்நிலையில், கர்நாடகாவில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பா கூறும்போது, நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது.

அனைத்து அமைச்சர்கள் மற்றும் வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் நாங்கள் இந்த பொதுமுடக்கம் முடிவை எடுத்துள்ளோம். அதன்படி மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை வாங்குவதற்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். நாளை இரவு 9 மணி முதல் மே 10 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது எனவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.


newstm.in

Tags:
Next Story
Share it