Theme Check

இன்று இதை செய்யுங்க! நவகிரகங்களின் அருள் நிச்சயம் கிடைக்கும்!

வர்ற திங்கட்கிழமை இதை மிஸ் பண்ணாதீங்க! நவகிரகங்களின் அருள் நிச்சயம் கிடைக்கும்!

இன்று இதை செய்யுங்க! நவகிரகங்களின் அருள் நிச்சயம் கிடைக்கும்!
X

எல்லோரும் சனிப்பெயர்ச்சி நாளையா அல்லது டிசம்பர் மாதமா என்று விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். சனிப்பெயர்ச்சி எப்போது நிகழ்ந்தாலும் கவலைப்பட தேவையில்லை. வர்ற திங்கட்கிழமை சிவராத்திரி வருகின்றது. சிவராத்திரியன்று சிவனே கதியென்று மயிலாப்பூர் வாருங்கள்!

இன்று இதை செய்யுங்க! நவகிரகங்களின் அருள் நிச்சயம் கிடைக்கும்!

‘கயிலையே மயிலை’ என்று போற்றப்படுகிற மயிலாப்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில், ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது அருள்மிகு அப்பர் சுவாமி திருக்கோயில். அடியார்கள் அனைவருமே நன்மை பெற வேண்டும் என்று எண்ணற்ற தத்துவங்களை இறைவனிடம் பெற்று வழங்கியவர் அப்பர் சுவாமிகள். அவற்றுள் ஞான தெளிவு பெற்றிடல் என்பது தனிப்பெருமை வாய்ந்தது. நாமும் வாழ்க்கையில் ஞானத்தை அடைவதற்கு சித்தர்களின் ஆசியும் நிச்சயம் வேண்டும். ஸ்ரீ அப்பர் சுவாமிகள், 1851ம் ஆண்டு ஆனி மாதம் பரணி நட்சத்திரத்தில் பிரம்ம சமாதி அடைந்தார். அதன் பிறகு, அவருடைய ஆத்ம சீடரான சிதம்பர சுவாமிகள், அப்பர் சுவாமிகளின் ஜீவசமாதியின் மீது ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து 1855ல் அவர் நினைவாக 16 கால் மண்டபம் ஒன்றை கட்டினார். பின்னர், அதைத் திருக்கோயிலாக மாற்றியமைத்தார்.

இன்று இதை செய்யுங்க! நவகிரகங்களின் அருள் நிச்சயம் கிடைக்கும்!

காசியைப் போன்றே இந்தத் தலத்திலும் பைரவர் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. இது தவிர மயிலையில் மொத்தம் ஏழு சிவன் கோயில்கள் உள்ளன. வரும் திங்கட்கிழமை சிவராத்திரியன்று மாலை இந்த 7 சிவன் கோயில்களையும் வழிபட்டு, இவற்றோடு அப்பர் சுவாமி கோயிலுக்கும் சென்று தரிசித்தால் நவகிரகங்களின் அருள்பார்வை நம் மீது பட்டு நம் துன்பங்கள் எல்லாம் பனித்துளியைப் போன்று விலகி ஓடும் என்பது உறுதி.

newstm.in

Tags:
Next Story
Share it