லஞ்சம் கொடுக்காதீங்க.. காவல் நிலையத்தில் வினோதம்.. விளம்பரப் பலகை வைத்த இன்ஸ்பெக்டர்..!
லஞ்சம் கொடுக்காதீங்க.. காவல் நிலையத்தில் வினோதம்.. விளம்பரப் பலகை வைத்த இன்ஸ்பெக்டர்..!

காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்கச் சென்றால், ‘லஞ்சம் கொடுத்து தான் காரியத்தை சாதிக்க முடியும்’ என்ற மனோநிலை மக்கள் மத்தியில் உள்ளது. இதற்கு விதி விலக்காக, மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் ஆய்வாளர் வைத்துள்ள விளம்பரப் பலகை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மதுரை மாநகர் சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றிய சரவணன், ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு கடந்த 25-ம் தேதி காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றார். இதையடுத்து அவர், காவல் நிலையத்தில் வைத்துள்ள விளம்பரப் பலகை தற்போது வைரலாகி வருகிறது.
அதில், சரவணன் ஆகிய நான் யாரிடமும் லஞ்சம் வாங்குவதில்லை. என் பெயரைச் சொல்லிக்கொண்டு, காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை சுமூகமாக முடித்து தருவதாக கூறும் யாரிடமும் பணமோ, பொருளோ கொடுக்க வேண்டாம்.

அப்படி கொடுக்கும் பட்சத்தில், அதற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பில்லை என தெரிவித்துக்கொள்கிறேன்” என்று விளம்பரப் பலகை வைத்திருப்பது அங்கு வரும் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

