Theme Check

இரட்டை இலை வழக்கு – டிடிவி தினகரனிடம் 11 மணி நேரம் விசாரணை!!

இரட்டை இலை வழக்கு – டிடிவி தினகரனிடம் 11 மணி நேரம் விசாரணை!!

இரட்டை இலை வழக்கு – டிடிவி தினகரனிடம் 11 மணி நேரம் விசாரணை!!
X

இரட்டை இலை வழக்கு தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் 2017ஆம் ஆண்டு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், இடைத்தரகர் சுகேஷ் உள்ளிட்டோர் மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வழக்கில் கடந்த 4ஆம் தேதி வழக்குப்பதிவு செய்த டெல்லி அமலாக்கத்துறை இடைத்தரகர் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் டிடிவி தினகரன் தனக்கு 50 கோடி ரூபாய் கொடுத்ததாக சுகேஷ் கூறினார்.

dhinakaran

அதில் 25 கோடி ரூபாய் தனக்கு வழங்கியதாகவும் மீதமுள்ள 25 கோடி ரூபாய் கேரள மாநிலத்தில் உள்ள தன் மனைவியிடம் வழங்கியதாக சுகேஷ் சந்திரசேகர் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது லஞ்சம் கொடுக்கபட்டதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் சுகேஷ் சந்திரசேகர் கொடுக்கக்கூடிய வாக்குமூலங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்க வேண்டாம் என டிடிவி தினகரன் தரப்பு கேட்டுக் கொண்டது.

ttv

இந்நிலையில் 11 மணி நேர விசாரணை நேற்று இரவு முடிந்தது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தாம் நிரபராதி என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் பின்புலம் உள்ளது குற்றம் சாட்டினார். மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வருவேன் என்றும் அவர் கூறினார்.

newstm.in

Next Story
Share it