Theme Check

இன்று முதல் பான் – ஆதார் இணைத்தால் இரு மடங்கு அபராதம்!!

இன்று முதல் பான் – ஆதார் இணைத்தால் இரு மடங்கு அபராதம்!!

இன்று முதல் பான் – ஆதார் இணைத்தால் இரு மடங்கு அபராதம்!!
X

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு இன்று முதல் இரண்டு மடங்கு அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. அவ்வாறு இணைக்க கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

பலமுறை அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், மார்ச் 31ஆம் தேதிக்குக்குள் இணைக்காதவர்களுக்கு 500 ரூபாய் அபராதத்துடன் ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை நேற்று இரவு 11 மணிக்குள் இணைக்காதவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

pan-aadhaar

உங்கள் 12 இலக்க ஆதார் எண் > 10 இலக்க பான் எண் > ஆகியவற்றை டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமாகவும் இந்த இணைப்பை செய்ய முடியும்.

நீங்கள் அனுப்பும் பான் எண், ஆதாருடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டு விட்டால், ‘இந்த பான் நம்பருடன் ஏற்கனவே ஆதார் இணைக்கப்பட்டுள்ளதுஎன்று உங்களுக்கு குறுந்தகவல் வரும்.

pan-aadhaar

அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை இந்த அபராதத்துடன் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. அதன் பிறகும் இணைக்காதவர்களின் பான் எண்கள் முடக்கப்படும் எனத் தெரிகிறது.

newstm.in

Next Story
Share it