Theme Check

இன்று வலுப்பெறுகிறது டவ்-தே புயல்! வெளுத்து வாங்கப் போகும் மழை!

இன்று வலுப்பெறுகிறது டவ்-தே புயல்! வெளுத்து வாங்கப் போகும் மழை!

இன்று வலுப்பெறுகிறது டவ்-தே புயல்! வெளுத்து வாங்கப் போகும் மழை!
X

தமிழகத்தில் கோடை கத்திரி வெயில் தொடங்கி கொளுத்தி வருகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியிருந்தாலும், பெரும்பாலான மக்கள் வெப்பம் காரணமாக அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கோடையிலும் புயல் சின்னம் உருவாகி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை புதிய புயல் டவ்-தே உருவாவதால் தமிழகம், கேரளத்தில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மேற்கு கடற்பகுதியிலுள்ள லட்சத்தீவுகள் நேற்று முதல் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படும். பலத்தக் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று நாளை மத்திய அரபிக்கடல் வழியாக செல்கிறது. இந்த புயல் குஜராத் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கரையைக் கடக்கலாம் என கணிக்கப்பட்டது, இந்நிலையில், டவ்-தே புயல் வரும் 18ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags:
Next Story
Share it