வரதட்சணை கொடுமை.. நண்பர்களுடன் மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கணவர் !
வரதட்சணை கொடுமை.. நண்பர்களுடன் மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கணவர் !

கூடுதல் வரதட்சணை அளிக்காததால் திருமணமான இளம் பெண்ணை கணவரே தனது நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் போலீசாரிடம் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகாரில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு எனது கணவரும், அவருடைய வீட்டாரும் கூடுதல் வரதட்சணை கேட்டு என்னை துன்புறுத்தி வந்தனர்.

ஒரு கட்டத்தில் என்னுடைய பெற்றோரால் கூடுதல் வரதட்சணை தர இயலாது என்பதை தெரிந்து கொண்ட எனது கணவர், என்னையும், எனது வீட்டாரையும் பழிவாங்க விபரீத முயற்சியை கையாண்டார்.
கடந்த சனிக்கிழமையன்று எனது கணவர் அவருடைய நண்பரை அழைத்துவந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்தார். மறுநாள் அவருடைய மற்றொரு நண்பரை கூட்டி வந்து என்னை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ய வைத்தார். மேலும் எனது கணவரும், அவரது நண்பரும் என்னுடைய பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடியை தூவி என்னை சித்ரவதை செய்தனர். பின்னர் இது குறித்து எனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அவர்கள் வந்து என்னை மீட்டனர் என புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த புகார் மனுவை படித்த போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் பெண் அனுபவித்த கொடுமைக்கு தீர்வு காணவேண்டும் என விசாரணையை தொடர்ந்தனர் போலீசார். இதனிடையே அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடினர்.
அப்போது இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகி உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை அமைத்து தலைமறைவாக இருப்போரை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

