Theme Check

அழகற்ற பெண்கள் திருமணத்திற்கு உதவும் வரதட்சணை! பாடத்தால் சர்ச்சை!!

அழகற்ற பெண்கள் திருமணத்திற்கு உதவும் வரதட்சணை! பாடத்தால் சர்ச்சை!!

அழகற்ற பெண்கள் திருமணத்திற்கு உதவும் வரதட்சணை! பாடத்தால் சர்ச்சை!!
X

செவிலியர் பாட புத்தகத்தில் வரதட்சணையை நியாயப்படுத்தும் வகையில் பாடம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணையின் நன்மைகள் என்ற தலைப்பின்கீழ் பல்வேறு பாயிண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில், குடும்பங்களை கட்டமைப்பதில் வரதட்சனை முக்கிய பங்கு வகிக்கிறது. வரதட்சணை மூலம் பெற்றோரின் சொத்தில் இருந்து சம பங்கினை மகள்கள் பெற முடிகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வரதட்சணை மூலம் பெண்கள் கல்வி அதிகரிக்கிறது. நன்கு படித்து, வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டிய தேவை குறைகிறது. இதனால், அநேக பெற்றோர்கள் தங்கள் மகள்களை படிக்க வைக்க முன்வந்துள்ளனர்.

dowry

எனவே, பெண் கல்வியை வரதட்சணை மறைமுகமாக ஊக்குவிக்கிறது. அசிங்கமான தோற்றம் கொண்ட பெண்கள் கூட அதிக வரதட்சணை கொடுத்து அழகான ஒருவரை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று பாடத்திட்டத்தில் உள்ளது.

வரதட்சணை தொடர்பான இந்த பதிவு சமூக ஊடங்களில் பேசு பொருளானது. மோசமான கருத்தை விதைக்கும் இத்தகையை கருத்தை பாடங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளது.


செவிலியர் மாணவர்களுக்கான சமூகவியல் புத்தகத்தில் வரதட்சணையை நியாயப்படுத்தும் விதமாக சில கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகத்தின் ஆசிரியர் டி.க.இந்திராணி என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it