Theme Check

பெரும் நெகிழ்ச்சி.. நடித்து கொண்டிருந்த போதே உயிரிழந்த நாடக கலைஞர் !

பெரும் நெகிழ்ச்சி.. நடித்து கொண்டிருந்த போதே உயிரிழந்த நாடக கலைஞர் !

பெரும் நெகிழ்ச்சி.. நடித்து கொண்டிருந்த போதே உயிரிழந்த நாடக கலைஞர் !
X

ஐமேக்ஸ் போன்ற பல தொழில் நுட்பங்கள் இன்றைய சினிமாவில் புகுந்துவிட்டது. இதனால் இளைஞர்களும் அதனைநோக்கியே ஓடுகின்றனர். ஆனால், நமது பாரம்பரிய கதைகள், பண்பாட்டை விளக்கும் மேடை நாடகங்கள் என்பது இப்போது குறைந்துவிட்டது. எனினும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் சில கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டு அவை காப்பாற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டம் குப்பன் துறை கிராமத்தில் ஆண்டுதோறும் இரண்யா நாடகம் நடத்துவது வழக்கம். இந்த நாடகத்தில் அதே ஊரைச் சேர்ந்த ராஐய்யன்(62) என்பவர் நரசிம்மன் வேடத்திலும் நாரதர் வேடத்திலும் நடிப்பார். இவரது பாடலுக்கும் நடிப்புக்கும் அப்பகுதியில் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

dfg

5 நாட்கள் நடைபெறும் இந்த நாடகத்தில் கடைசி நாளான நேற்று இரவு தொடங்கிய நாடகம் காலை 7 மணிக்கு முடியும். இந்த நிலையில் அதிகாலை 3 மணிக்கு நாடகம் நடித்துக் கொண்டிருந்தபோதே ராஜய்யன் திடீரென மயங்கி மேடையிலேயே விழுந்தார். இதனால் பார்வையாளர்கள், சக கலைஞர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

சக நடிகர்கள் உடனே அவரை தூக்கி மருத்துவமனைக்கு கொண்டுச்சென்று சேர்த்தனர். அப்போது மருத்துவர்கள் ஏற்கனவே இவர் இறந்து விட்டதாக கூறினர். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. அந்த கலைஞருக்கு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டுச்சென்று அஞ்சலி செலுத்தினர்.

newstm.in

Next Story
Share it