Theme Check

கூடுதலா ஒரு கப் பால் குடிங்க.. பொதுமக்களுக்கு பிரதமர் அட்வைஸ்..!

கூடுதலா ஒரு கப் பால் குடிங்க.. பொதுமக்களுக்கு பிரதமர் அட்வைஸ்..!

கூடுதலா ஒரு கப் பால் குடிங்க.. பொதுமக்களுக்கு பிரதமர் அட்வைஸ்..!
X

ஜப்பான் பாராளுமன்றத்தில் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் ‘இந்த குளிர்காலத்தில் அதிகப்படியான பால் வீணாகி வருகிறது. தற்போது, 5,000 டன் பச்சை பால் வீணாகலாம். பால் பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளது’ என்று கூறினர்.

இதுகுறித்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பேசுகையில், “தினசரி உணவான பால் வீணாவதை தடுக்க நீங்கள் வழக்கமாக செய்வதைக் காட்டிலும் கூடுதலாக ஒரு கப் பால் குடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், சமைக்கும் போது பால் பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறினார்.

Japanese Officials Beg Public to Drink More Milk as Glut Worsens - Bloomberg
ஜப்பான் பால் பண்ணையாளர்கள் டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 3ம் தேதி வரை தினமும் கூடுதலாக ஒரு லிட்டர் பால் வாங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

மேலும், சமூக ஊடகங்களில் #1L perday என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்கள் முயற்சிகளை பொதுமக்கள் கவனத்தில் கொண்டு வருகின்றனர். இதையடுத்து, கன்வெனியன்ஸ் ஸ்டோர்களின் சூடான பால் கோப்பைகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடியை டிசம்பர் 31 மற்றும் புத்தாண்டு தினத்தில் வழங்குகிறது என்பதும் குறிப்பிடதக்கது.

Next Story
Share it