கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு.. ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் !!
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு.. ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் !!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் இரண்டு ஆண்டுகளாக பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு இருந்த மக்களின் இயல்பு வாழ்க்கையை தற்போது அடியோடி மாற்றியுள்ளது கொரோனா வைரஸ். அதனை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை.
எனினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உலக நாடுகள் மக்களுக்க செலுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து போர்ச்சுக்கல் ஆராய்ச்சியாளர்கள் அசத்தியுள்ளனர்.

லிஸ்பன் நோவா பல்கலைக்கழகத்தின் அங்கமான ரசாயன மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 3 மருந்துகளின் கலவையானது கொரோனா நகலெடுப்பை குறைக்கும் என்று கூறுகின்றனர். இதுபற்றி ஆராய்ச்சியாளர் சிசிலியா அர்ரியானோ கூறுகையில், இந்த மருந்துகளால் வைரஸ் நகலெடுப்பது 50 சதவீதம் மட்டுமே நடந்தள்ளது என்பதை கண்டுள்ளோம். வைரஸ் செயல்பாட்டை குறைக்க ‘என்எஸ்பி 14’ என்ற வைரஸ் புரதத்தில் இந்த மருந்துகளின் கலவை செயல்படும் என குறிப்பிட்டார்.

இந்த மருந்துகளானது, கொரோனாவால் மருத்துவமனைகளில் மக்கள் சேர்வதை தடுக்கும் அல்லது குறைக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில்2 மருந்துகள் மற்ற நோய்களுக்கு மருந்தாகவும், எஞ்சிய மருந்து சந்தை ஒப்புதலுக்கு காத்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர். ஆனால் அவர்கள் காப்புரிமை பிரச்சினையால் மருந்துகளின் பெயர்களை வெளியிடவில்லை.
newstm.in

