Theme Check

கடமை தான் முக்கியம்..! மோசடி வழக்கில் வருங்கால கணவரை கைது செய்த பெண் எஸ்.ஜ..!!

கடமை தான் முக்கியம்..! மோசடி வழக்கில் வருங்கால கணவரை கைது செய்த பெண் எஸ்.ஜ..!!

கடமை தான் முக்கியம்..! மோசடி வழக்கில் வருங்கால கணவரை கைது செய்த பெண் எஸ்.ஜ..!!
X

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜுன்மோனி ரபா. உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் இவருக்கு அவரது பெற்றோர் வரன் தேடி வந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ராணா போஹாட் (33) என்பவர் ஜுன்மோனி ரபாவுக்கு அறிமுகம் ஆனார்.

அதைதொடர்ந்து இருவரும் தொலைப்பேசியிலும், நேரிலும் ஒருவரையொருவர் பார்த்து பேசி பழகிய நிலையில், தன்னை ஒரு அரசு மக்கள் தொடர்பு அதிகாரி என கூறி, ஜுன்மோனி ரபாவை நம்ப வைத்துள்ளார் ராணா போஹாட்.

Assam-Cop-Arrests-Fiance

இதையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடன் அவர்களின் நிச்சயதார்த்தம் அதே ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. வரும் நவம்பர் மாதம் அவர்கள் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஜுன்மோனி ரபாவுக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், ‘நீங்கள் திருமணம் செய்யப் போகும் ராணா போஹாட் பல மோசடி செயல்களில் ஈடுபட்டவர். அவரை நம்பாதீர்கள்’ எனக் கூறி அழைப்பை துண்டித்துவிட்டார்.

இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஜுன்மோனி, அதுகுறித்து விசாரிக்க முடிவெடுத்தார். அதன்படி ராணா போஹாட்டுக்கு போன் செய்த அவர், பணிபுரியும் அலுவலகம் குறித்து கேட்டு, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். உஷாரான ஜுன்மோனி, அதற்கு அடுத்தடுத்த நாட்களில் வருங்கால கணவருக்கு தெரியாமலேயே அவர் குறித்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டார்.

Assam-Cop-Arrests-Fiance

இந்நிலையில், ஓ.என்.ஜி.சி.யில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பலரிடம் ராணா பண மோசடி செய்ததாக ஜூன்மோனியிடம் சிலர் கூறியுள்ளனர். இது குறித்து விசாரித்த அவர், ராணா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். வருங்கால கணவர் என பாராமல், அவரை கைது செய்த உதவி ஆய்வாளர் ஜுன்மோனிக்கு காவல் உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:
Next Story
Share it