Theme Check

மாறும் விதிகள்! புத்தாண்டில் இந்த வங்கியின் சேவை கட்டணங்கள் உயர்கிறது !!

மாறும் விதிகள்! புத்தாண்டில் இந்த வங்கியின் சேவை கட்டணங்கள் உயர்கிறது !!

மாறும் விதிகள்! புத்தாண்டில் இந்த வங்கியின் சேவை கட்டணங்கள் உயர்கிறது !!
X

இந்திய தபால் துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் அனுப்பினாலோ, பணம் டெபாசிட் செய்தாலோ அதற்கு இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

வங்கியின் கூற்றுப்படி, அடிப்படை சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஒவ்வொரு மாதமும் 4 முறை கட்டணம் செலுத்தாமல் பணம் எடுக்கலாம். ஆனால் இதற்குப் பிறகு, பணம் எடுக்கும்போதெல்லாம், வாடிக்கையாளர்கள் 0.50 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டும். குறைந்தபட்ச கட்டணம் 25 ரூபாயாக இருக்கும். சேமிப்பு வங்கிக் கணக்கில் (SAVINGS ACCOUNT) பணத்தை டெபாசிட் செய்வதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது.

post

கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகியிருந்த நிலையில், அது 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல்தான் அமலுக்கு வருகிறது. பணம் டெபாசிட் செய்வதற்கு எந்தவொரு கட்டுப்பாடும் கிடையாது. ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணத்தை டெபாசிட் செய்யலாம். இதற்குக் கட்டணம் எதுவும் இல்லை. இது அடிப்படை சேமிப்புக் கணக்குகளுக்குப் பொருந்தும்.

newstm.in

Tags:
Next Story
Share it