Theme Check

அதிகாலை ஏற்பட்ட சோகம்.. சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!

அதிகாலை ஏற்பட்ட சோகம்.. சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!

அதிகாலை ஏற்பட்ட சோகம்.. சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!
X

ஆந்திர மாநிலம், அனந்த்பூர் மாவட்டம் முலகலேடு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது.

இதில், அந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கி அந்த வீட்டில் இருந்த ஜெய்னுபீ (60), அவரது மகன் தாது (36), மருமகள் சர்புன்னா (30), பேரன் ஃபிர்டோஸ் (6) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

‘இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.10 மணியளவில் நடைபெற்றுள்ளது. அப்போது, வீட்டில் இருந்த அனைவரும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்த விபத்தில் சுற்றியுள்ள மற்ற வீடுகளும் சேதமடைந்தன. ஆனால், அந்த வீடுகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை’ என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it