Theme Check

ஹைதியை உலுக்கிய நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 304 ஆக உயர்வு.. நகர் பகுதி முழுவதும் கட்டிடங்கள் இடிந்து நொறுங்கியது !!

ஹைதியை உலுக்கிய நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 304 ஆக உயர்வு.. நகர் பகுதி முழுவதும் கட்டிடங்கள் இடிந்து நொறுங்கியது !!

ஹைதியை உலுக்கிய நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 304 ஆக உயர்வு.. நகர் பகுதி முழுவதும் கட்டிடங்கள் இடிந்து நொறுங்கியது !!
X

ஹைதி நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 29 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியானது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட புகைப்படங்களும் உயிரிழப்பு எண்ணிக்கையும் வெளியாகி உலக நாடுகளை அதிரவைத்துள்ளது.

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. ஹைதியின் போர்ட்-அயு- பிரின்ஸில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

haiti earthquake

மேலும், அமெரிக்காவின் அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
haiti earthquake
இதனிடையே, ஹைதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 29 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அடுத்தடுத்து தகவல்கள் உலகத்திற்கு வெளிவந்தன. அதாவது ஹைதியில் இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.
haiti earthquake

தற்போது 304 பேர் நிலநடுக்கத்தால் உயிரிழந்திருப்பதாகவும் ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டை புரட்டிப் போட்டுள்ளது எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
haiti earthquake

அதேநேரத்தில் ஹைதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உலக நாடுகளை பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it