Theme Check

எளிதாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள்.. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி !!

எளிதாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள்.. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி !!

எளிதாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள்.. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி !!
X

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2ஆவது அலையில் ஏராளமானோர் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அதனை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அது மேலும் சவாலை அதிகமாக்கியிருக்கிறது.

இந்த நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் மற்றும் கன்டெய்னர்களை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் வகையிலான 23, ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகள், ஜெர்மனியிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு ராணுவ மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும்.

ஒவ்வொரு கருவியும் நிமிடத்துக்கு 40 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை. இவற்றின் மூலம் 20 முதல் 25 நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் ஆக்ஸிஜன் கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்ஸிஜன் கருவிகள் ஒரு வாரத்துக்குள் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எளிதாக கடத்த முடியும் என்பதால் நாடு முழுவதும் பயன்படுத்த முடியும் எனவும் கருதப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it