Theme Check

வைரலாகும் மின் வாரிய ஊழியர் திருமண போஸ்டர்!!

வைரலாகும் மின் வாரிய ஊழியர் திருமண போஸ்டர்!!

வைரலாகும் மின் வாரிய ஊழியர் திருமண போஸ்டர்!!
X

நண்பர்களின் திருமணம் என்றால் புது மாப்பிள்ளை புது பெண்ணையும் வாழ்த்தி விதவிதமாக போஸ்டர் அடித்து ஒட்டுவதும் பிளக்ஸ் போர்டு வைப்பதும் வாடிக்கையாகி விட்டது.

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் கோணம் பகுதியை சேர்ந்தவர் வினோஜி. மின் வாரிய ஊழியரான இவருக்கும், பட்டதாரி பெண் நிஷா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அவர்களை வாழ்த்தும் விதத்தில் ‘இ.கே.எம் ராக்ஸ்’ என்ற 2-கே கிட்ஸ் நண்பர் குழுவால் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

Marriage-banner

அதில், திருமண தம்பதியை குறவன், குறத்தி போல் சித்தரித்து இரணியல் கோணத்தில் "மின் வெட்டு" ஓ சாமியோ அணில் பிடிக்கணுமா அணில்...! ஒரு அணிலுக்கு 100-ரூபாய் தான் சாமி என்று புதுப்பெண் கேட்பது போலவும் எண்ணோ, எக்கோ பீஸ் கட்டணுமா ஒரு வீட்டிற்கு 200-ரூபாய் தான் என்று புது மாப்பிள்ளை கேட்பது போல் உள்ளது.

அதற்கு கவுண்டமணியின் காமெடி வரிகளான ‘அட கொக்கமக்கா உலக மகா தொழில்டா’ என தொடங்கி ‘அது இல்லண்ணே எத்தனை வீட்டுல பீஸ் கட் பண்ணியிருப்பான் இப்ப அவனுக்கே பீஸ பிடுங்க ஒருத்தி வந்துட்டா’ என செந்தில் பதில் சொல்லும் காமெடி வரிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.

Marriage-banner

இந்த போஸ்டர் தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்து வருவதோடு சமூக வலைதளங்கைளில் வைரலாகி உள்ளது. மின்வெட்டுக்கு காரணம் அணில்கள்தான் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it