எடப்பாடி வெளியே… சசிகலா உள்ளே..!
எடப்பாடி வெளியே… சசிகலா உள்ளே..!

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மதுசூதனனின் உடல்நலம் குறித்து விசாரிக்க சசிகலா மருத்துவமனைக்கு சென்றார். அதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் தான் மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரிக்க எடப்பாடி பழனிசாமியும் மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், முதல்வர் நாற்காலியில் தன்னை அமர வைத்த சசிகலாவை இதுவரை சந்திக்காத எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையின் உள்ளே இருக்கும் நிலையில், சசிகலா அங்கு வந்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், சசிகலாவின் வருகையை அறிந்த எடப்பாடி பழனிசாமி அப்போலோ மருத்துவமனையில் இருந்து தனது காரில் வெளியேற, அதிமுக கொடி கட்டிய காரில் வந்த சசிகலா மருத்துவமனையின் உள்ளே நுழைந்தார்.