Theme Check

கருமுட்டை விற்பனை... நெஞ்சை பதறவைக்கும் சிறுமியின் வாக்குமூலம்!!

கருமுட்டை விற்பனை... நெஞ்சை பதறவைக்கும் சிறுமியின் வாக்குமூலம்!!

கருமுட்டை விற்பனை... நெஞ்சை பதறவைக்கும் சிறுமியின் வாக்குமூலம்!!
X

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெற்ற தாயே, புரோக்கர்கள் உதவியுடன் கருமுட்டைகள் விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் தாய் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சூழ்நிலையில் மருத்துவக்குழுவினர் சிறுமியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

ஏற்கெனவே போலீசார் நடத்திய விசாரணையில் ஈரோடு,பெருந்துறை,சேலம் மற்றும் ஒசூர் என மொத்தம் 4 மருத்துவமனைகளில், சிறுமி 12 வயதில் பருவம் எட்டியது முதல் கடந்த 4 ஆண்டுகளாக கருமுட்டைகளை விற்பனை செய்துவந்தாக தகவல் தெரிவித்தார்.

erd issue 1

இந்த சூழ்நிலையில், சிறுமியை தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்று கருமுட்டை விற்பனை செய்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கேரள மாநிலம், திருவனந்தபுரத்திற்கும், ஆந்திர மாநிலம் திருப்பதிக்கும் அழைத்துச்செல்லப்பட்டு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 4 மருத்துவமனைகளிலும் விசாரணை நடத்திய பின், திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கும், திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்த மருத்துவக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

newstm.in

Next Story
Share it