Theme Check

தேர்தல் தேதியில் மாற்றம்- தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு.. குழம்பிய வாக்காளர்கள் !!

தேர்தல் தேதியில் மாற்றம்- தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு.. குழம்பிய வாக்காளர்கள் !!

தேர்தல் தேதியில் மாற்றம்- தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு.. குழம்பிய வாக்காளர்கள் !!
X

இந்தாண்டு தொடக்கத்தில் பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்த நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர வாக்குவேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

vote

இந்நிலையில், சீக்கிய மத குருக்களில் ஒருவரான குரு ரவிதாஸ் ஜெயந்தி ஆண்டுதோறும் பிப்ரவரி 10 முதல் 16 வரை கடைபிடிக்கப்படுவதால் சீக்கியர்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் பகுதிக்கு புனிதப்பயணம் மேற்கொள்வர்கள். தற்போது, சட்டசபை தேர்தல் பிப்ரவரி 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் சீக்கியர்கள் தங்களின் புனித பயணமான குரு ரவிதாஸ் நினைவிடத்திற்கு செல்வதில் இடையூறு ஏற்படலாம் என கருதப்படுகிறது. மேலும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் குறையலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

vote

இதனால், தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கடிதம் எழுதியுள்ளன. இந்நிலையில் இந்த கோரிக்கையை பரிசீலித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 14ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. அதேநேரத்தில் வாக்கு எண்ணிக்கை நேரத்தில் மாற்றமில்லை எனவும் கூறியுள்ளது,


newstm.in


Next Story
Share it